மருத்துவத்துறையை பணத்தொழிலாக கருதக்கூடாது - திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பட்டமளிப்பு விழாவில் பேச்சு

மருத்துவத்துறையை பணத்தொழிலாக கருதக்கூடாது - திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பட்டமளிப்பு விழாவில் பேச்சு

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி கலந்துகொண்டு 150 மருத்துவ மாணவர்களுக்கு பட்டங்களையும் கேடயங்களையும் வழங்கினார்.

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு பட்டமளிப்பு விழாவில் பேசியபோது.... மருத்துவத்துறையில் அடைந்திருக்கும் வளர்ச்சி ஆனது ஏழை, எளிய மக்களுக்கும் சென்று சேரும் வகையில் எளிமையான ஒன்றாக மாறியுள்ளது.

மருத்துவர்கள் தாங்கள் சந்திக்கும் எதிர்மறை கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல் நேர்மறை எதிர்மறை என்ற இரு சூழல்களிலும் நோயாளிகளிடம் மிகுந்த அன்போடு பழகுதல் அவசியம். அதே போன்று நாம் முன்னால் நம்மை புகழ்பவர்களை விட நம்மை இகழ்வுபவர்களை நாம் நாம் வளர்ச்சிக்கு உதவுபவர்களாக நினைத்து முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும்.

மருத்துவ மாணவர்களாகிய நீங்கள் நோயாளிகளிடம் காட்ட வேண்டியது அன்பும் பணிவும் தான். நோயாளிகளுக்கு முடிந்தவரை உதவிடுங்கள். உலகில் மிகச் சிறந்த துறைகளில் ஒன்று மருத்துவ துறை இதை பணத்தை வைத்து தொழிலாக நினைக்காமல் ஒரு சேவையாக நினைக்க வேண்டும். மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சையை தாண்டி அவர்களுடன் உரையாடும் உரையாடல் மிக முக்கியமானது.

பெரியார் கூறியது போல ஒரு வீட்டில் பெண் கல்வி கற்றால் என்றால் குடும்பமட்டுமன்றி இந்த சமுதாயமே முன்னேறுவதற்கு உதவும் அந்த வகையில் இன்று பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். மருத்துவத்துறையிலும் விதிவிலக்கல்ல என்றார். பட்டமளிப்பு விழாவில் மருத்துவர்கள், பேராசிரியர்கள், மருத்துவம் பயிலும் ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டனர்.