மழை நீரால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட விவசாயி கூறியதால் ஆத்திரம் அடைந்து ஒருமையில் பேசிய அமைச்சர் மகேஷ் விவசாயிகள் வேதனை

மழை நீரால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட விவசாயி கூறியதால் ஆத்திரம் அடைந்து ஒருமையில் பேசிய அமைச்சர் மகேஷ் விவசாயிகள் வேதனை
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் கனமழை பெய்தது இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் சம்பா நெற்பயிர்கள்  தண்ணீரில் மூழ்கி பாதிப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் திருநெடுங்களம், பத்தாளப்பேட்டை, கிளியூர், நடராஜபுரம், வேங்கூர், அரசன்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

திருவெறும்பூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களையும், சாலைகளையும், பார்ப்பதற்கு திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ.வும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருநெடுங்களம் பகுதியில் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடியாமல் உள்ளதை பார்வையிட்ட வந்தார்.

அப்போது வயதான விவசாயி வயலில் இறங்கி பாருங்கள் என கூறியவரை அவமானப்படுத்தும் விதத்தில் ஒருமையில் பேசி வேர் பகுதிக்கு செல்லுங்கள் என்று கடுமையாக கூறியது சக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் மழை பாதித்த பகுதியில் புகைப்படம் எடுப்பது போல் நின்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை திமுக தொண்டர்களை சால்வை அணிவிக்க அனுமதித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn