முசிறி நகராட்சியில் ரூபாய் 23.3 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் நேரு அடிக்கல்

முசிறி நகராட்சியில் ரூபாய் 23.3 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் நேரு அடிக்கல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி நகராட்சி, மற்றும் மேட்டுப்பாளையம் தாத்தையங்கார்பேட்டை,தொட்டியம், காட்டுப்புத்தூர் ஆகிய பேரூராட்சிகளில் ரூபாய் 28.28 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என் நேரு அவர்கள்

இன்று 16 3/2025 மாவட்ட ஆட்சித்தலைவர் திரு மா. பிரதீப் குமார் அவர்கள் தலைமையில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் திரு நா. தியாகராஜன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மூன்று புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டில் நான்கு முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள்

பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முசிறி பழைய பேருந்து நிலையப் பகுதியில் ₹ 1.34 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் தொடர்ந்து மேட்டுப்பாளையம் பேரூராட்சி மோருப்பட்டி

கிராமத்தில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் 5.79 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவுநீர் மேலாண்மை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 3.26 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 6.7 கோடி மதிப்பில் கசடு கழிவு நீர் மேலாண்மை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.51 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.மேலும் தொட்டியம் பேரூராட்சியில் நடைபெற்ற விழாவில் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.7.30 கோடி மதிப்பீட்டில் கசடுவடி நீர் மேலாண்மை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து தொடர்ந்து தொட்டியம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹3.0 ஒரு கோடி மதிப்பீடு மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து இரண்டு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்

இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் திரு.தானமூர்த்தி செயற்பொறியாளர் திரு.பார்த்திபன் முசிறி நகராட்சி தலைவர் திருமதி. கலைச்செல்வி சிவக்குமார் முசிறி வருவாய் கோட்டாட்சியர் திருமதி  தேவசேனா திருச்சிராப்பள்ளி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் திரு கோ. துவார நார்ஸின் செயற்பொறியாளர் திருச்சி சுப்பிரமணியன் உதவி செயற்பொறியாளர் திரு ராதா பேரூராட்சி தலைவர்கள் திரு ஆ. சௌந்தரராஜன் மேட்டுப்பாளையம் திருமதி கா. ராஜலட்சுமி தாத்தையங்கார்பேட்டை திருமதி சரண்யா பிரபு தொட்டியம் திருமதி ச. சங்கீதா காட்டுப்புத்தூர் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் துணைத் தலைவர்கள் நகர்மன்ற மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் முசிறி நகராட்சி ஆணையர் திருமதி பா. கிருஷ்ணவேணி பொறியாளர் திரு சம்பத்குமார் பேரூராட்சி செயல் அலுவலர்கள் திரு சு.சதீஷ் கிருஷ்ணன் பொறியாளர் த திரு ரா அன்பழகன் திருமதி சாய் இளவரசி திருமதி நா சே பரமேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision