தந்தை பெரியார் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் சார்பாக பன்னாட்டு கருத்தரங்கம்

தந்தை பெரியார் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் சார்பாக பன்னாட்டு கருத்தரங்கம்

தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பாக 13/3/2025 அன்று தகவல் தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது..இக்கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு வாசுதேவன் ஐயா அவர்கள் தலைமையுரையாற்றினார்

ஆங்கிலத்துறை பேராசிரியர் D. தனலட்சுமி வரவேற்புரை நல்கினார். கென்யா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப துறையின் கலைப்புலத் தலைவர் சமூக பணித்துறை தொழில்நுட்ப முதன்மையர்

பேராசிரியர் திரு பீட்டர் எம் மாத்யூ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கினைச் சிறப்பித்தார்..துருக்கி பல்கலைக்கழக பேராசிரியர் Dr.கியாக்சன் அராஸ் நிறைவிழாவிழாவில் மிக சிறப்பாக. உரையாற்றினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் ஜோஸ்பின் பெட்ரீஷியா அறிமுக உரையாற்றினார்கள்.

பேராசிரியர் முனைவர் D. ராதா மற்றும் பேராசிரியர் வில்லவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் ..ஜமால் முகமது கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் அஜ்மல் கான், உருமு தனலட்சுமி கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர்.S.கந்தசாமி S.தூய வளனார் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் V..l ஜெயபால் மற்றும் தேசிய கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் ஸ்ரீவித்யா. அவர்களுடன் தந்தை பெரியார் கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் முனைவர் R பிரேமா முனைவர் யசோதா தேவி முனைவர் சசிகலா முனைவர் கிருஷ்ண பிரியா முனைவர் நீலா.கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கருத்தரங்கத்தினுடைய அனைத்து கருத்துகளையும் ஆங்கிலத் துறை பேராசிரியர் முனைவர் சோ ஜெயலக்ஷ்மி அவர்கள் தொகுத்து வழங்கினார் ..முனைவர நோபல் ஜெபகுமார் அவர்கள் நன்றியுரை வழங்க பேராசிரியர்கள் உட்பட 200 மாணவர்களுக்கும் மேற்பட்டவர்கள் 20 அரங்கங்கங்களாக பன்னாட்டு கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision