தேவையின்றி சுற்றித்திரிந்த 250க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த கடந்த 10ஆம் தேதி முதல் வருகிற 24-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் செல்லும் வாகன ஓட்டுநர்கள் இ-பதிவு செய்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனை அடிப்படையில் வாகனத்தில் செல்வோர் நேற்று முதல் இ-பதிவு கட்டாயம் என்ற நிலையில் நேற்று முதல் திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட 58 சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில் இ-பதிவு இல்லாதவர்கள் மற்றும் தேவையின்றி வாகனத்தில் சுற்றித்திரிந்த வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அந்தந்த காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை வாகனங்கள் அனைத்தும் ஆயுதப்படை மைதானத்திலேயே வைக்கப்படும் மறு உத்தரவு வந்த பிறகு அபராதம் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK