11 மாதங்களுக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டு - மீண்டும் பல்நோக்கு சிகிச்சைக்காக மாற்றம்!!

11 மாதங்களுக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டு - மீண்டும் பல்நோக்கு சிகிச்சைக்காக மாற்றம்!!

Advertisement

திருச்சி புத்தூர் அண்ணல் காந்தி அரசு மருத்துவமனைக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு அண்டை மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம். அந்த வகையில் நாள்தோறும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுவார்கள்.

இம்மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர நிலை, இருதயவியல், குழந்தை மருத்துவம், குழந்தை அறுவை சிகிச்சை, உளவியல், கதிரியக்கவியல், புற்றுநோய் சிகிச்சை என பல்வேறு துறைகள் உள்ளது. ஆறு மாடிகளைக் கொண்ட இந்த பல்நோக்கு மருத்துவமனையில் 700 படுக்கைகள் உள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து 

இந்த பல்நோக்கு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்போது அதே வளாகத்தில் உள்ள தனி வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தூய்மை படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மீண்டும் பல்நோக்கு மருத்துவமனையாக இன்று முதல் செயல்பட துவங்கியுள்ளது. 

Advertisement

டீன் வனிதா ரிப்பன் வெட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார்.

பின்னர் பேட்டியளித்த அவர்... "மீண்டும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மாற்றப்பட்டு செயல்படத் துவங்கியுள்ளது. அனைத்து நோய்களுக்கும் வழக்கம்போல் சிகிச்சை மேற்கொள்ளப்படும். கடந்த செப்டம்பர் மாதம் முதல் கொரோன தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது ஒற்றை இலக்கமாக குறைந்துவிட்டது. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. 

முன் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் என 1,200 பேருக்கு கோவி சீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை"என்றார்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd