தாமரைக்கு ஓட்டு போட்டதால் கொலை - சமூக வலைத்தளங்களில் பதிவு - வழக்கு பதிவு

தாமரைக்கு ஓட்டு போட்டதால் கொலை - சமூக வலைத்தளங்களில் பதிவு - வழக்கு பதிவு

திருச்சிராப்பள்ளி மாவட்டம். சமூக வலைதள பிரிவில் பணிபுரிந்துவரும் காதர் பாட்ஷா (28), என்பவர் இணைய மற்றும் சமூக வலைதள குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்த போது. கடந்த (21.04.24)-ஆம் தேதி சமுகவலைதளமான X-வலைதளத்தை பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது Mr Sinha (Modi's family) @MrSinha என்ற ID-யில் https://x.com/mrsinha_/status/1782030286840287382?s=48&t=UHQhG5dx_Id0Q75pZ7rF8Q - link Mrs Gomthi from Tamilnadu She's beaten till death by DMK workers Her only mistake was, she voted for BJP - No democracy under attack? No constitution under attack? No human rights for her? Everybody is silent like nothing happened !!!" என்ற உண்மைக்கு புறம்பான வதந்தியான செய்தியை உள்நோக்கத்தோடு பதிவிடப்பட்டுள்ளதாகவும், Mr Sinha (Modi's family) என்பவரின் தூண்டுதலின் பேரில், அந்த பதிவினை பொதுமக்களிடம் பரப்பும் வகையில் Saravanan (மோடியின் குடும்பம்) @saravanan_Indt என்ற ID-யில் இருந்து

அதிர்ச்சி செய்தி - தாமரைக்கு ஓட்டு போட்டதால் கொலை! Dinamalar" என்ற தலைப்புடன் இந்த செய்தி வந்து 16 மணி நேரம் ஆகிறது. ஏன் மற்ற ஊடகங்கள் இதை பற்றி பேசவில்லை? கடலூர் ஸ்ரீமுஷ்ணம் - சிதம்பரம் தொகுதிக்குள் வருகிறது. இங்கே வி.சி.க தலைவர் மற்றும் பி.ஜே.பி யை சேர்ந்த கார்திகாயினி போட்டியிடுகின்றனர் என்று மறுபதிவு (Repost) செய்து உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பியுள்ளார்.

ஆனால் உண்மையில் கடந்த (19.04.24) மாலை ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு முன்விரோதம் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கோமதி என்பவர் கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது, அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 Us 147,148, 294 (b). 323,324,506(ii) and 302 IPC r/w 4 of TNPWH-6 பதிவு செய்யப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடலூர் மாவட்டம் காவல் துறை சார்பாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி உண்மை இவ்வாறு இருக்க, X-தளத்தில் Mr Sinha (Modi's family) @MrSinha மற்றும் @saravanan_Indt என்ற ID-யில் உள்நோக்கத்தோடு தமிழ்நாட்டு மக்களிடையே பொது அமைதியை குலைத்து தமிழ்நாட்டில் இரு கட்சிகளுக்கும் இடையேயும், கலவரத்தை உண்டு பண்ணும் பொருட்டு உண்மைக்கு மாறான மேற்படி வதந்தியான செய்தியை உருவாக்கி அதனை X-தளத்தில் பதிவிட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மனுதாரர் அளித்த புகாரின் பேரில்,

திருச்சிராப்பள்ளி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் Cr.No.20/24, U/s 153,153 (A) (1) (b), 504,505(1)(b),505(II) IPC வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Instagram, X (Twitter), Facebook & Youtube போன்ற சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுபவர்களை சமூக வலைத்தள கண்காணிப்பு குழு மூலம் கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision