சிஐடியு நிர்வாகிகளை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

சிஐடியு நிர்வாகிகளை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிஐடியு நிர்வாகிகளை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் சிஐடியு அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பினர் கூலி உயர்வு கேட்டு லாரி உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்து இதுவரை லாரி உரிமையாளர்கள் கூலி உயர்த்ததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் சிலர் தமிழ்நாடு வணிகர்கள்  பேரவையில் இணைந்து தன்னிச்சையாக ஒரு புதிய லாரி புக்கிங் நிலையத்தை துவக்கி புதிய ஆட்களை வைத்து சரக்குகளை கையாளப் போவதாக அறிவித்து புதிய அலுவலகத்தை நேற்று திறந்தனர். அங்கு முற்றுகையிட்ட சிஐடியு தொழிலாளர் தொழிலாளர்கள் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது கைகலப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறையினர் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் ராமர் மற்றும் ராஜா உள்ளிட்ட 9 பேர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து இன்று திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் சிஐடியூ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட ராஜா, ராமன் உட்பட 9 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

மேலும் 20க்கும் மேற்பட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ஸ்ரீதர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I