பழக்கடை பெண்ணுடன் பழக்கம் வடமாநில இளைஞர் கைது

Mar 18, 2023 - 23:35
Mar 19, 2023 - 04:44
 1233
பழக்கடை பெண்ணுடன் பழக்கம் வடமாநில இளைஞர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தந்தை இழந்து தாயுடன் வசித்து வரும் பெண் திருச்சி தில்லைநகரில் உள்ள பத்மா பழமுதிர்ச்சோலை பழக்கடையில் வேலை செய்து வந்தார். இந்த பழக்கடையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தாரங்க பகுதியைச் சேர்ந்த அஜித் அலி (21) என்பவர் வேலை செய்து வந்துள்ளார்.

இருவரும் ஒருவருக்கொருவர் பழகி காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை அஜித்அலி திருமணம் செய்து கொள்வதாக கூறியதின் பேரில் பெண் வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் தனது வீட்டில் உள்ள ஒரு நிகழ்விற்காக சென்று வருவதாக அஜித் அலி அசாம் மாநிலம் சென்றார். ஆனால் அங்கு சென்ற அவர் செல்போனை ஆப் செய்துவிட்டு இந்த பெண்ணிடம் தொடர்பைத் துண்டித்துள்ளார். இது குறித்து அந்தப் பெண்ணின் தாய் லதா மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் உத்தரவின் பேரில் மண்ணச்சநல்லூர் எஸ்.ஐ அருண்குமார், எஸ்.எஸ்.ஐ சுரேஷ்குமார் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அசாம் மாநிலத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்குள்ள காவல் துறை அதிகாரிகளுடன் பேசி அஜித் அலியை கைது செய்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் கொண்டு வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அஜித் அலி அசாம் மாநிலம் தப்பி ஓடிய நிலையில் அங்குள்ள உறவு பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியதாக மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn