வெளிநாட்டில்  உயிரிழந்த சின்ன சூரியூரை சேர்ந்த தொழிலாளியின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

வெளிநாட்டில்  உயிரிழந்த சின்ன சூரியூரை சேர்ந்த தொழிலாளியின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

 திருவெறும்பூர் அருகே உள்ள சின்ன சூரியூரில் இருந்து உஷ்பெஸ்கிஸ்தான் நாட்டிற்கு வேலைக்கு சென்று கடந்த 12ம் தேதி இறந்து போனதொழிலாளியின் உடல் இன்று காலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

 திருவெறும்பூர் அருகே உள்ள சின்ன சூரியூரை சேர்ந்த திருப்பதி என்பவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உஷ்பெஸ்கிஸ்தான் நாட்டிற்கு வேலைக்கு கம்பி கட்டும் பிட்டர் வேலைக்கு சென்றுள்ளார் அப்படி வேலைக்கு சென்றவர் அங்கு கடந்த 12ஆம் தேதி இறந்துள்ளார் அப்படி இறந்தவரின் உடலைசொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தார் திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ வும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேள் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கலெக்டர் மற்றும் இந்திய வெளியுறவு துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்தினார். 

இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் விரைந்து  நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து உஷ்பெஸ்கிஸ் தானிலிருந்து  இன்று காலை 5 மணிக்கு சொந்த ஊரான சின்ன சூரியூருக்கு திருப்பதியின் உடல் வந்து சேர்ந்தது

காலை 6மணிக்கு திருப்பதியின் உடலை அவரது உறவினர்கள் முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.

இந்நிலையில் திருப்பதியின்  தந்தை பெரியசாமி  வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்று இறந்துபோன தனது மகனின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP


 
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionntrichyvisionn