கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறும் இணையதளம் அறிவிப்பு

கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறும் இணையதளம் அறிவிப்பு

 திண்டுக்கல் மாவட்டம், நீலகிரி மாவட்டம் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் கோடைகாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்கும் நோக்கில் கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் அமல்படுத்தியதை போன்றே இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் கீழ் மே 7 ஆம் தேதியில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கொடைக்கானல் வருவோர் இ பாஸ் பெறுவது கட்டாயமாகியுள்ளது.அதன்படி நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றலா பயணிகள் "epass.tnega.org" என்ற இணைய முகவரியில் காலை 6 மணி முதல் இ பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகில் உள்ள சுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் மொபைல் செயலி மூலம் இந்த கியூ ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து சுற்றுலா பயணிகளின் பயண விவரங்களை தெரிந்துகொள்வதோடு, இந்த நடைமுறையினை கண்காணிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இ பாஸ் தொடர்பான துரித நடவடிக்கைக்கு வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision