சிறுநீரக செயலிழப்பவர்கள் 2.50 லட்சமாக அதிகரிக்கும் நிலை - திருச்சி காவேரி மருத்துவமனை தகவல்

உலக சிறுநீரக தினம்இ ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 2ம் வியாழக்கிழமையன்று சர்வதேச சிறுநீரக சங்கம் மூலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களிடையே சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தக் கொண்டாடப்பட்டு வருகிறது.சிறுநீரக நோய் தற்போது அதிக அளவில் பெருகி வருகிறது. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை இந்நோய்க்கான முக்கியமான காரணங்கள் என்பதால், மேற்கண்ட நோயாளிகள் மற்றும் உடற்பருமன் அதிகம் உள்ள நோயாளிகள் குடும்பத்தில் சிறுநீரக நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகப் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
சிறுநீரக செயலிழப்பு (End Stage Renal Disease ) நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 2 1/2 இலட்சமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் வெறும் 10 சதவீதத்தினர் மட்டுமே Dialysis மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்கின்றனர். மக்களிடையே நிலவும் Dialysis மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை பற்றிய அச்சமே காரணமாகும். மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது.
திருச்சி காவேரி மருத்துவமனையில் சிறுநீரகவியல் பிரிவில் சிறுநீரக மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சிறப்பாகச் செய்யப்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்கு 2000க்கு மேற்பட்ட Dialysis சிகிச்சை ஆண்டிற்கு 100க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று சிகிச்சை அதிக அளவில் சிறுநீரககற்கள் அகற்றும் அறுவை சிகிச்சை மற்றும் Prostate அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன
ஒவ்வொரு ஆண்டும் உலக சிறுநீரகதினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் காவேரி மருத்துவமனை சார்பில் நடத்தபட்டு வருகின்றன. இவ்வாண்டும் இந்நாளைக் கொண்டாடும் விதமாக சிறுநீரக மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision