±2 செய்முறை தேர்வு 124 பள்ளிகளைச் சேர்ந்த 11,056 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

±2 செய்முறை தேர்வு 124 பள்ளிகளைச் சேர்ந்த 11,056 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

திருச்சி மாவட்டத்தில் பணிரெண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு முதல் கட்டமாக  இன்று முதல்  (16.04.2021 - 20.04.2021) வரை 90 மையத்தில் 124 பள்ளிகளுக்கு நடைபெறுகிறது. இரண்டாவது கட்டமாக ( 20.04.2021 முதல் 23.04.2021 ) வரை 105 மையங்களில் 133 பள்ளிகளுக்கு நடைபெறுகிறது. ஆக மொத்தம் 195 மையங்களில் 257 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடைபெறுகிறது. 

மணப்பாறை 2546 மாணவ, மாணவிகளில் 2433 மாணவ மாணவிகள் செய்முறை தேர்வில் கலந்து கொண்டனர். 113 மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வில் பங்கேற்கவில்லை. 

லால்குடி 2823 மாணவ, மாணவிகளில் 2784 மாணவ மாணவிகள் செய்முறை தேர்வில் கலந்து கொண்டனர். 39 மாணவ மாணவிகள் செய்முறை தேர்வில் பங்கேற்கவில்லை. 

திருச்சி 4254 மாணவ, மாணவிகளில் 4137 மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வில் கலந்து கொண்டனர். 117 மாணவ மாணவிகள் செய்முறை தேர்வில் பங்கேற்கவில்லை. 

முசிறி 1750  மாணவ, மாணவிகளில் 1702 மாணவ மாணவிகள் செய்முறை தேர்வில் கலந்து கொண்டனர். 48 மாணவ மாணவிகள் செய்முறை தேர்வில் பங்கேற்கவில்லை. 

ஆக மொத்தம் 11,373 மாணவ, மாணவிகளில் 11,056 மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வில் பங்கேற்றனர். 317 மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வில் பங்கேற்கவில்லை.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu