கல்லணை சாலையில் பாசன வடிகால் புதுப்பிக்கும் பணி – அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு!

கல்லணை சாலையில் பாசன வடிகால் புதுப்பிக்கும் பணி – அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு!

திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி கல்லணை சாலையில் பாசன வடிகால் பாலம் புதுப்பிக்கும் பணியை பார்வையிட்டார் .

திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம் பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சி கல்லணை ரோட்டில் பாசன வடிகால் பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisement

அப்பணியை மாவட்ட கழக பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு சில ஆலோசனைகளை வழங்கினார்.

நிகழ்வில், செயற்குழு உறுப்பினர் சேகரன், ஒன்றியக் கழகச் செயலாளர் கருணாநிதி, ஊராட்சி செயலாளர் குவளை பிரபா, குவளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் அழகு செந்தில், ஒன்றிய குழுத்தலைவர் சத்யா கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன் மற்றும் குவளக்குடி ஊராட்சி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.