கனிவுடன் நடக்க காவலர்களுக்கு பயிற்சி!! ஐஜி பங்கேற்பு

கனிவுடன் நடக்க காவலர்களுக்கு பயிற்சி!! ஐஜி பங்கேற்பு

திருச்சி சரக 5 மாவட்டங்களில் பொதுமக்களிடம் நன்முறையில் நடந்து கொள்ளாத காவலர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்ன அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் திருச்சி மாநகர ஆயுதப்படை திருமண மண்டபத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் திருச்சி மாநகரத்தில் பணிபுரியக்கூடிய உதவி ஆணையர்கள் ,காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு பொதுமக்களுடன் எப்படி நடந்துகொள்வது ,கோவிட் பேரிடர் காலத்தில் எப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகரில் தற்பொழுது 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணி புரிந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு திருச்சி மாநகர துணை ஆணையர்கள் தலைமையில் வெவ்வேறு பகுதிகளில் இந்த ஆலோசனை கூட்டமும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கூறுகையில்… திருச்சி மாநகரில் பொதுமக்களிடம் நல்லுறவுடன் நடந்து கொள்ளாத 90 பேர் (காவல்துறையில் பணி புரிய கூடிய உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்கள்) கண்டறிந்து அவர்களுக்கு பேராசிரியர்களை வைத்து மனதளவிலான பயிற்சியும் அவர்களுடைய மன இறுக்கத்தை போக்கக்கூடிய பயிற்சிகளும் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் தனி அரங்கில் நடைபெற்று வருகிறது. பணியில் இருந்து கொண்டே இவர்கள் பயிற்சியிலும் கலந்து கொள்வார்கள்.விடுப்பு கேட்பவர்களுக்கும் கொடுக்கபடுவதாகவும் குறிப்பிட்டார்.