கனமழை எதிரொலி! கொரோனா பரிசோதனைக்காக குவிந்த மக்கள்!! திணறும் திருச்சி அரசு மருத்துவமனை!!!

கனமழை எதிரொலி! கொரோனா பரிசோதனைக்காக குவிந்த மக்கள்!! திணறும் திருச்சி அரசு மருத்துவமனை!!!

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழலில், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கோவிட் பரிசோதனை செய்யும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகத்தினரால் போதிய இருக்கை வசதிகள் செய்யப்பட்டும், அங்கு மக்கள் காத்திருக்க முடியாமல், வேகமாக பரிசோதனை எடுக்கும் நோக்கத்தில் கூட்டமாக நிற்பதனால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனை நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.

Advertisement

மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் அடுத்தடுத்து பரிசோதனை எடுக்கப்படும் என்று கூறி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் மக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கோவிட் பரிசோதனை மையம் கூட்டமாக காணப்படுகிறது.

கடந்த மூன்று நாட்களாக திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், சளி காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறிகளுக்கு உள்ளானவர்கள் தங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் பரிசோதனை செய்ய குவிந்துள்ளதால் திருச்சி அரசு மருத்துவமனையின் கோவிட் பரிசோதனை மையம் கூட்டநெரிசலுடன் காணப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவிக்கையில் போதிய பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டுள்ளது மக்கள் காத்திருந்து பொறுமையுடன் எடுத்துச் செல்லவேண்டும்,தனிமனித இடைவெளியை பின்பற்றி மருத்துவர்களின் சிரமத்தை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.