7 வயது சிறுமியை சீரழித்த குற்றவாளி!! மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும்போது தப்பி ஓட்டம்!!

7 வயது சிறுமியை சீரழித்த குற்றவாளி!! மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும்போது தப்பி ஓட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 7 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி ராஜா என்பவரை பிடித்து ஏம்பல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

This image has an empty alt attribute; its file name is IMG-20200716-WA0022-268x300.jpg

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா ஏம்பல் மேலகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 1ம் தேதி கிளவிதம்மம் ஊரணியில் இறந்த நிலையில் தலை மற்றும் கை பகுதிகளில் காயங்களுடன் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பின், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

This image has an empty alt attribute; its file name is IMG-20200715-WA0078-300x221.jpg
Advertisement

அறந்தாங்கி டிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் போலீசார் விசாரணையின் அடிப்படையில் சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த பூக்கட்டும் தொழிலாளி ராஜா என்பவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.அவர்தான் அங்குள்ள காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து கழுத்துப் பகுதியில் குத்தியும் தலையில் அடித்துக் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 20200716_134715-300x297.jpg

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஏம்பல் காவல்நிலைய போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சாமிவேல் (எ) ராஜா(26) காவல் நிலையத்தில் இருந்து வந்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is IMG-20200716-WA0018-300x225.jpg

இந்நிலையில் இன்று முருகையன் மற்றும் காவலர் கோகுல குமார் ஆகிய இருவரும் குற்றவாளியான ராஜாவை மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கொண்டிருந்த பொழுது, இன்று காலை 7 மணியளவில் கை விலங்கை உருவிக்கொண்டு தப்பித்து ஓடி விட்டதாக காவலர் தெரிவித்தனர். 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜா தப்பி ஓடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.

This image has an empty alt attribute; its file name is IMG-20200716-WA0024-300x169.jpg