கத்தியால் கிழித்து கொண்ட விவசாயி! பரபரப்பான ஆட்சியர் அலுவலகம்!!

கத்தியால் கிழித்து கொண்ட விவசாயி! பரபரப்பான ஆட்சியர் அலுவலகம்!!

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் படுத்து விவசாயிகள் வெண்டை, உளுந்து பயிர் செடிகளுடன் போராட்டம். விவசாயி கத்தியை வைத்து கிழித்துக்கொண்டு திடீர் என ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கீழகல்கண்டார் கோட்டையில் மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி மக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் 650 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும். நெல் ,உளுந்து ,வெண்டைக்காய் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும் அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தில் பணியிலிருக்கும் காவல்துறையினரை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

சாக்கடை கழிவுநீரை விவசாய நிலத்தில் விட கூடாது.விவசாயத்திற்கு உள்ள இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது.விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும், 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ஓய்வூதியம் ரூ. 5000/- வழங்க வேண்டும், காவிரி – அய்யாறு – உப்பாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு சோளம், வெண்டைக்காய், எள் ஆகிய செடிகளை வைத்து தரையில் படுத்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Advertisement

பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட ரவி என்ற இசை கையில் வைத்திருந்த கத்தியை வைத்து கை மற்றும் மார்பக பகுதியில் கிழித்துக் கொண்டார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.