பலமுறை எச்சரிக்கை - கொள்ளிடம் ஆற்றில் தொடரும் சோகம்

பலமுறை எச்சரிக்கை - கொள்ளிடம் ஆற்றில் தொடரும் சோகம்

திருச்சி உறையூர் வாத்துகார தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் செக்போஸ்ட் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக 3 சிறுமியுடன் வந்துள்ளார். அப்போது தடுப்புச் சுவர் அருகே குளித்தபோது கொள்ளிடம் பாலம் தூண்களுக்கு அழைத்து செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக 3 குழந்தைகள் நீருக்குள் சென்றதால் அங்கிருந்தவர் உதவியுடன் 2 சிறுமிகள் பத்திரமாக காப்பாற்றினர்.

மற்றொரு சிறுமி 4 வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி நீரில் மூழ்கினார். பிறகு அங்கிருந்து உடனடியாக சிறுமியை நீருக்குள் சென்று தேடி மீட்டனர். உடனடியாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் சிறுமியை பரிசோதனை செய்த நிலையில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைப்பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வார இறுதி நாட்களில் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கொள்ளிடம் ஆற்று பகுதியில் குடும்பத்தினுடன் குளிக்க வருவது தொடர்கதையாகி விட்டது. ஆற்றில் ஒரு தடுப்பு சுவர் கட்டியிருப்பதால் அதில் தண்ணீர் வழிந்து ஓடுவதை பார்த்து ஏராளமானோர் அங்கே வர துவங்கியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision