எஸ் ஆர் எம் கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ ஞான சிக்தி கணபதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
திருச்சி மாவட்டம் இருங்கலூர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் மற்றும் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஞான சிக்தி கணபதி விநாயகர் புதிதாக கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு ஸ்ரீ ஞான சித்தி கணபதி ஆலயம் அருகே ஆனி மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை யாகசாலை அமைக்கப்பட்டு முதல் கால பூஜை மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாஜனம், பஞ்சகவ்யம், அனுக்ஞை. ஸங்கல்பம், மஹா கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை. ப்ரம்மச்சாரி பூலை, த்ரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் 6 தேதி சனிக்கிழமை இரண்டாம் கால பூஜை தீர்த்த ஸங்கிரஹணம் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தணம்யாக சாலை பிரவேசம், காலை ஆறு மணி அளவில் துவங்கிய யாகசாலையில் நான்கு கட்ட பூஜை மறை, கும்பாலங்காரம், கலாகர்ஷணம், அடன் புறப்பாடு பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.
இவ்விழாவில் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் விழா ஆனி மாதம் 23ம் தேதிஞாயிற்றுக்கிழமை காலை 9:20 மணி அளவில் ஜண்டா மேளத்துடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திர முழங்க யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு கண்டு விமான கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர் என திரளானோர் பங்கேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision