திருச்சி பறவைகள் பூங்கா அனுமதிக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

திருச்சி பறவைகள் பூங்கா அனுமதிக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும், பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக பார்க்க அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையாக மனு அளிக்கப்பட்டது.
திருச்சி பறவைகள் பூங்காவை உள்ளே சென்று பார்ப்பதற்கு பெரியவர்களுக்கு ரூபாய் 200/ சிறியவர்களுக்கு ரூபாய் 150 /கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது அதிகமான தொகை எனவே கட்டணத்தை குறைக்க வேண்டும், பள்ளி குழந்தைகளுக்கு பறவைகளைப் பற்றி அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்வதற்காக இலவசமாக அனுமதி அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 17.2 2025 காலை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையாக மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் CPI மாநகர் மாவட்டச் செயலாளர் S.சிவா, AITUC மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ் M.C, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் எம்.ஆர். முருகன், மேற்கு பகுதி குழு செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி, அந்த நல்லூர் D. வீரமுத்து,போக்குவரத்து கழகம் அன்பழகன் உள்ளிட்டோர்.