திருச்சியில் பேட்மிட்டன் கோர்ட்டிற்கு மின்சார இணைப்பு வழங்க ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய அதிகாரி , உதவியாளர் கைது

திருச்சியில் பேட்மிட்டன் கோர்ட்டிற்கு  மின்சார இணைப்பு வழங்க ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய அதிகாரி , உதவியாளர் கைது

திருச்சி கே .கே நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்த திரு சீனிவாசன் என்பவர் கே .கே நகரில் தனது பெயரில் பேட்மிட்டன் கோர்ட் கட்டுவதற்கு மும்முனை மின்சாரம் வேண்டி மின் இணைப்பு பெற கேகே நகர் உதவி செயற்பொறியாளர் திரு சந்திரசேகர்

 என்பவரை அனுகிய போது அவர் மின் இணைப்பு பெற ரூபாய் 10000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக 17.02.2025 திரு. சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு

 இன்று துணை கண்காணிப்பாளர் திரு மணிகண்டன் தலைமையில் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது உதவிப் பொறியாளர் திரு .சந்திரசேகர் லஞ்சம் பணத்தை தனது தனிப்பட்ட உதவியாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி 

என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது உடனடியாக கிருஷ்ணமூர்த்தியையும், திரு. சந்திரசேகர் ஆகிய இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.இது தொடர்பாக கே .கே நகர் மின்சார வாரிய அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.