இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ரோபோ - குளிர்பானங்களை வழங்கி அசத்தல்

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ரோபோ - குளிர்பானங்களை வழங்கி அசத்தல் இஸ்லாமியர்களை ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி கருமண்டபம் பகுதியில் ஆண்டுதோறும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும்விதமாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது, நடப்பாண்டு சிறப்பம்சமாக நோன்பாளர்களுக்கு தேவையான சஹர் உணவுகள், நோன்பு கஞ்சி, பழங்கள் மற்றும் குளிர் பானங்களை விநியோகிக்கும் விதமாக திருச்சியைச் சேர்ந்த ஆஷிக் ரகுமான் தலைமையிலான ரோபாட்டிக் வடிவமைப்பாளர் குழுவினரால் உருவாக்கப்பட்ட நவீன ரோபோ மூலம் நேரடியாக அவர்களது இடத்திற்கு சசென்று குளிர்பானங்கள், நோன்புகஞ்சி விநியோகம் செய்யும்முறை அறிமுகப்படுத்தப்பட்டது....
வழக்கமான நோன்புகாலத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலமாக நோன்பு கஞ்சி மற்றும் நோன்பு திறப்புக்கான பழங்கள் மற்றும் பழச்சாறு வழங்கப்பட்டுவந்த நிலையில், முதன்முதலாக ரோபோமூலம் நோன்புக்கான உணவுகள் வழங்கப்பட்டது இஸ்லாமிய நோன்பாளர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது...இது கணினி காலம்.. அனைத்து துறைகளிலும் ரோபோக்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பங்கள் பயன்பாடு என வந்துவிட்டநிலையில்... நோன்பு திறப்பு காலத்திலும்
நோன்பாளர்களுக்கு நோன்பு கஞ்சி வழங்க ரோபோ பயன்பாடு இனி அனைத்து நோன்பு திறப்பின்போதும் காணலாம்.. அதேபோன்று இனி திருக்கோவில்களில் அன்னதானம் வழங்கவும் ரோபோக்கள் பயன்பாடு இடம்பெறுவது வெகுகாலத்தில் இல்லை என்றேகூறலாம்..கொரோனா காலத்தில் தமிழக மற்றும் கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து வழங்குவதில் முன்கள
பணியாளர்களுடன் சேர்ந்து ரோபோ பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது அதேபோன்று இன்றைய தினம் நோன்பு திறப்பு நிகழ்வில் ரோபோ பயன்படுத்தப்பட்டது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது என பெருமிதப்பட்டனர் ரோபோ வடிவமைப்பாளர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision