திருச்சியில் ரூ.7½ லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். இதில் அவர், ரூ.72 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அதனையும், அவரிடம் இருந்த ரூ.32 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision