சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் ..பக்தர்கள் வெள்ளத்தில் திருச்சி!
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் லட்சகணக்கானோர் பங்கேற்புதிருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் விழாவில் பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோயில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி, சிவபத்தில் எழுந்தருளி மும்மூர்த்திகளை நோக்கு மாயாசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் மரபு மாறி தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதமான நோய்களும், தீவினைகளும் அனுகாது, சகல செளபாக்கியங்களும் கிடைக்க, அம்மனே பக்தர்களுக்குகாக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை இருப்பது இக் கோயிலின் அம்பாளின் தனிச்சிறப்பு.
அம்மன் சிறப்புமிக்க பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று, படைத்தல், காத்தல்,அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் போன்ற ஐந்து தொழில்களையும் சித்திரை பெருவிழா நாட்களில் அம்பாள் அருள்புரிந்து வருவது இக்கோயிலின் புராண மரபு.
இக் கோயிலின் சித்திரைத் தேரோட்ட விழா கொடியேற்றம் இம் மாதம் 10 -ம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடந்து 10 -ம் தேதி முதல் 17 - ம் தேதி வரை தினசரி காலை அம்மன் பல்லாக்கில் புறப்பாடாகி, தினசரி இரவு அம்மன் பல்வேறு வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்றது .
தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி,அலகு குத்தியும் பறவைக்காவடி எடுத்தும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற சமயபுரம் கோவிலுக்கு இரவிலிருந்து நடைபயணமாக வந்து கொண்டே உள்ளனர்.
விழாவில் கோயில் இணை ஆணையரும் செயல்அலுவலருமான சி. கல்யாணி, கோயி்ல் பணியாளர்கள், திருச்சி மாவட்டம் மட்டும்மல்லாது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சரியாக காலை 11.45 மணி அளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு ரத வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் சமயபுரம் மாரியம்மன் தத்தளித்தபடி திருத்தேரில் பவனி வந்தாள்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, அலகு போன்றவற்றை எடுத்து வந்து தங்களுடைய நேர்த்திக் கடனை அம்மனுக்கு செலுத்தினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..