திருச்சி உத்தமர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா!!

திருச்சி உத்தமர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பிச்சாண்டார் கோவில் திருக்கரம்பனூரில் அமைந்துள்ளது உத்தமர் கோவில். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம். 108 திவ்யதேசங்களில் 32-வது கோவிலாகும். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை உத்தமர் கோவில் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.    

Advertisement

இன்றைக்கு சனிப்பெயர்ச்சி விழா சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார். வாக்கிய பஞ்சாங்க கணித முறைப்படி பிரவேசித்து அருளுகின்றார்

இதனை முன்னிட்டு தனுசு, மகரம், கும்பம், மிதுனம், கடகம், துலாம், கன்னி, மேஷம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதை தொடர்ந்து சரியாக அதிகாலை 5.22 மணிக்கு சனி பெயர்ச்சி நடைபெற்றது. சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

Advertisement

கொரோனா காரணமாக அரசு உத்தரவுப்படி மிகக் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.