ரேஷன் அரிசி கடத்திய ஆறு பேர் கைது 3500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 ஆம்னி வேன்கள் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்திய ஆறு பேர் கைது 3500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 ஆம்னி வேன்கள் பறிமுதல்*
09.04.25 ம் தேதி காலை திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் திருமதி சி.க்ஷ்யாமளா தேவி அவர்களது உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. R.வின்சென்ட் அவர்களது மேற்பார்வையில்
காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக அரியமங்கலம் பகுதிகளில் ரோந்து செய்தும் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் உடன் சேர்ந்து அரியமங்கலம் சோதனை சாவடியில் 4 ல் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இரண்டு ஆம்னி வேன்கள
நிறுத்தி சோதனை செய்ததில் மேற்படி இரண்டு ஆம்னி வாகனங்களில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டு விசாரணை செய்ததில் மேற்படி முதல் வாகனத்தில் 18 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் வந்த
1.நசுருதீன் த/பெ. முஹம்மது அலி , வடக்கு காட்டூர்
2.ஆசிப் அலி 25/25, த/பெ. அமானுல்லா காமராஜ் நகர் அரியமங்கலம்
3.இஸ்மாயில் 45/25
த/பெ. சுலைமான் சிவகாமி அம்மையார் தெரு, அரியமங்கலம் திருச்சி
4. ஜெயசீலன் 22/25
த/பெ. செபாஸ்டின் பாரதிதாசன் நகர் 7வது தெரு, வடக்கு காட்டூர்
5.இஸ்மாயில் 35/25 த/பெ. சையது 4/522, பாத்திமாபுரம் 6 வது தெரு வடக்கு காட்டூர் திருச்சி
மூட்டைகளையும் மேலும் விசாரணை செய்ததில் பாப்பா குறிச்சி வீதி வடங்கன் செல்லும் சாலை அருகே மறைத்து வைத்திருந்த 31 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் இருந்த வழக்கின் முக்கிய எதிரி இஸ்மாயில் என்பவர் மகன் முகமது சுலைமான் 19/25 ஆகிய ஆறு பேரையும் கைது செய்து
அவர்களிடம் இருந்து மொத்தமாக 3050 ரேஷன் அரிசியை கைப்பற்றி மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision