சிறுதானிய உணவு திருவிழா

சிறுதானிய உணவு திருவிழா

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அறிவுறுத்தலின் படியும்,  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், உத்தரவின் பேரில் "சிறுதானிய உணவு திருவிழா-2023" (EAT RIGHT MILLET MELA-2023) திருச்சிராப்பள்ளி, மத்திய பேருந்து நிலையம் அருகில், கலையரங்கத்தில்  நேற்று நடைபெற்து. இவ்விழாவினை  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், தலைமை ஏற்று துவக்கி வைத்தார். மாவட்டநியமனஅலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு, முன்னிலை வகித்து திட்ட விளக்கவுரையாற்றினார். ஜெகதீஸ்வரி, FSSA Fortification Nodal Officer  சிறப்புரையாற்றினார்கள். மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர்.டஸ்டாலின்பிரபு அவர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

அதன் தொடர்ச்சியாக இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த 2023-ம் ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாட்டு சபை அறிவித்ததின் அடிப்படையில் பள்ளி/கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் சிறுதானிய உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அனைவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இந்நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதனை நன்முறையில் பயன்படுத்திட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக சிறுதானிய உணவு வகைகள் மற்றும் மருத்துவபயன்கள் குறித்து "சிறுதானிய மருத்துவம்"(Millet Medicine) என்ற தலைப்பில் இணையவழி புத்தகம்வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை தரவிறக்கம் செய்து அனைவரும் படித்து பயன்பெறும்மாறும்கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் E.வசந்தன், T.பொன்ராஜ் மற்றும் T.சையத் இப்ராஹீம், M.வடிவேல், செல்வராஜ் D.ரெங்கநாதன், K.சண்முகசுந்தரம், W.ஜஸ்டின்அமல்ராஜ், R.அன்புச்செல்வன் மற்றும் T.மகாதேவன் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் N.பாண்டி, உணவு பாதுகாப்பு அலுவலர் இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றியுரை கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn