சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு நாள்விழா

சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு நாள்விழா

தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கிணங்க இன்று தென்னூர், சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் “தமிழ்நாடு திருநாள், சூலை-18”நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 பள்ளித்தலைமையாசிரியர்  ஜீவானந்தன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சர்குணம் அவர்களும்,திருச்சி நகர சரக வட்டாரக்கல்வி அலுவலர் திரு. ஜோசப் அந்தோணி அவர்களும் கலந்து கொண்டு தமிழ்நாடு நாள் சிறப்பினை எடுத்துக்கூறினர். 

வட்டாரக்கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி அவர்கள் பேசுகையில் சென்னை மாகாணம்-மதராஸ் மாகாணம்-மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை 1967ம் ஆண்டு ஜூலை 18-ல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த நாள் தமிழ்நாடு திருநாள் என தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது என்றார்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சர்க்குணம் அவர்கள் தனது உரையில்,நாடு விடுதலைக்கு முன்னர் மாகாண அமைப்பு முறையே நடைமுறையில் இருந்தது. சென்னை மாகாணம் என்பது இன்றைய கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிஷா மாநிலங்களின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்து வந்தது. மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும் சென்னை மாகாணம்-மதராஸ் மாகாணம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தமையால் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து 1967-ம் ஆண்டு ஜூலை 18ந் தேதி முதல்வர் அண்ணாவே தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான தனி மசோதா கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார்.

இதனால் தான் தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு திருநாள் என கொண்டாட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்திரவிற்கிணங்க இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது எனக்கூறினார். 

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு நாள் சுவரொட்டிகள் மாணவர்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. ஆசிரியை  சகாயராணி அவர்கள் நன்றி கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO