டீ சர்ட் சர்ச்சை வீதியில் சுவாமி ,அம்பாள் தேர் - பேச்சுவார்த்தை
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் பங்குனி தேர் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது
இரண்டு பெரிய தேரில் சுவாமி, அம்பாள் மற்றும் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் எழுந்தருளி தீபாராதனைக்கு பின்னர் திருத்தேர் காலை 7 மணியளவில் வடம் பிடிக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
முதலாவதாக சுவாமியும், அம்பாளும் அருள்பாலித்த தேரை பக்தர்கள் இழுத்து வந்து தென்மேற்கு மூளையில் வந்து நிறுத்தினர்.அதனைத் தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி தாயாரின் தேர் வடம்பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது.
தேரானது 4 வீதிகளிலும் வலம் வந்து பின்னர் இரண்டு தேரும் ஒரே நேரத்தில் நிலையை வந்தடையும்.
12 மணிக்கு இரண்டு தேர்களும் நிலைக்கு வந்து விட வேண்டும்.ஆனால்
தெற்கு வீதியில் சுவாமி தேரும்,
வடக்கு வீதியில் அம்பாள் தேரும் நிற்கிறது.
தேரை பாதியிலேயே நிறுத்தியதற்கு காரணம் என்று விசாரித்த பொழுது
ஒரு ஜாதி பிரிவினர் தங்களது ஜாதி பெயரில் டீசர்ட் அணிந்து இருந்ததால் அதனை அணியக்கூடாது என்று மறுத்தரப்பினர் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தேரை இழுக்காமல் விட்டுவிட்டு சென்றனர்.
தற்பொழுது காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 12 மணிக்கு எல்லாம் தேர் நிலைக்கு வந்து விட வேண்டும். இது மட்டும் இல்லாமல் தேர் நிலைக்கு வந்தால் தான் அப்பகுதியில் மின் இணைப்பு கொடுக்கப்படும். தேரை இழுக்க முடியாது என்று அப்படியே பாதியிலேயே விட்டுவிட்டு சென்றதால் தொடர்ந்து வடக்கு தெற்கு வீதியில் சுவாமி அம்பாள் தேர் நிற்கிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision