மூன்றாவது அலை வந்தால் அதனை எதிர்கொள்ள ரயில்வே பாதுகாப்பு படை தயாராக உள்ளது என ஆணையர் திருச்சியில் பேட்டி

மூன்றாவது அலை வந்தால் அதனை எதிர்கொள்ள ரயில்வே பாதுகாப்பு படை தயாராக உள்ளது என ஆணையர் திருச்சியில் பேட்டி

திருச்சி காஜாமலையில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை துவங்கி 100 ஆண்டுகள் ஆகிய தினத்தை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் பணியை ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை பாதுகாப்பு  ஆணையர் லூயிஸ் அமுதன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்..... 160 தலைமை காவலர்களுக்கான பயிற்சி மற்றும் புத்துணர்வு முகாம் 7 வாரம் முடிந்து இன்று அவர்கள் பணிக்கு திரும்ப உள்ளனர். ரயில்வே பாதுகாப்பு படையில் பணி புரியக்கூடிய அனைவரும் 100% கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளதாக தெரிவித்தார். கோவிட்டால் 8 பேர் ரயில்வே பாதுகாப்பு படையில் உயிரிழந்தனர். மூன்றாவது அலையை எதிர்கொள்ள ரயில்வே பாதுகாப்பு படை தயாராக உள்ளது.

அனைத்து ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் முககவசம் அணியாமல் வருபவர்களை ரயில் நிலையத்தில் அனுமதிக்க மாட்டோம். கோவிட் விழிப்புணர்வு குறித்த பதாகைகள், துண்டுபிரசுரங்கள் விளம்பரங்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் ஒட்டிய ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ரயில் வழியாக நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கு வரக்கூடிய பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவி மூலம் முழுவதும் ரயில் நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn