மாற்றம் ஒன்றே மாறாதது !வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்களின் தேதிகள் மாற்றம்

மாற்றம் ஒன்றே மாறாதது !வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்களின் தேதிகள் மாற்றம்

தமிழகம் முழுவதும் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் 68 ஆயிரம் வாக்கு சாவடிகளில் நடப் பதாக இருந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடக்கிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு நேற்று வெளியிட்ட அறிவிப்பில்... தேர்தல் ஆணையம் அறி வுறுத்தலின் படி, 2024ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத் தம் கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வரை, இந்த பணிகள் நடக்க இருந்தது

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட வர்கள் தங்களது பெயரை சேர்க்கவும், பெயர்களில் தவறு இருந்தால் திருத்தம் செய்யவும், இறந்தவர்களின் பெயரை நீக்கம் செய்யவும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்க்கவும் கால அவகாசம் வழங்க பட்டு உள்ளது. இதற்கென 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளை உள்ள டக்கிய 30 ஆயிரம் முகாம் களில் ஏற்கனவே கடந்த4ம் தேதி சனிக்கிழமையும், 5ம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இரண்டாவது சிறப்பு முகாம் வரும் 18ம் தேதி சனிக்கிழமையும், 19ம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் மேற்குறிப்பிட்ட வாக்கு ச்சாவடி முகாம்களில் நடைபெறும்

என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே 18ம் தேதி சனிக்கிழமையை பணி நாளாக அரசு அறி வித்துள்ளது. எனவே வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறுவ தாக அறிவிக்கப்பட்ட சிறப்பு முகாம்கள், 25ம் தேதி சனிக்கிழமையும், 26ம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் நடைபெறுமாறு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது இவ்வாறு சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision