முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தரும் திருச்சி சிடி ஸ்கேன் சென்டர்!!

முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தரும் திருச்சி சிடி ஸ்கேன் சென்டர்!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவதுஅலை அதிதீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 

Advertisement

இந்த கொரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில் தங்களுடைய இக்கட்டான இந்த சூழ்நிலையிலும் வீடு குடும்பம் என அனைத்தும் ஒருபுறமாக இருந்தாலும் சமுதாய மக்களுக்காக களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையினர் மற்றும் ஊடகத் துறையினர் என அனைவரின் பணிகளை இந்த இக்கட்டான இரண்டாவது அலையில் வெறும் வாய் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

Advertisement

அந்தவகையில் திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள சாரா சிடி ஸ்கேன் சென்டர் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் களத்தில் நின்று பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளித்து உள்ளது. நுரையீரல் கொரோனா தொற்று நோய் பரிசோதனை மற்றும் சிடி ஸ்கேன் ஆகியவற்றை 1,500 ரூபாயில் முன் களப்பணியாளர்களுக்கு சலுகை அறிவித்துள்ளது. 

கொரோனாவை காரணம் காட்டி கொள்ளை லாபம் அடிக்கும் தனியார் மருத்துவமனைக்கு மத்தியில் களத்தில் நின்று பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு சலுகை அளித்து சிடி ஸ்கேன் எடுத்து தரும் திருச்சி சாரா சிடி ஸ்கேன் சென்டர் கிரேட் தான் பா!!

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd