திருச்சி KMC மருத்துவமனை மற்றும் வனத்துறை இணைந்து பச்சமலை மக்களுக்கு மருத்துவ முகாம்

திருச்சி KMC மருத்துவமனை மற்றும் வனத்துறை இணைந்து பச்சமலை மக்களுக்கு மருத்துவ முகாம்

பச்சைமலை, டாப் செங்காட்டுப்பட்டி காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு பல்லுயிர் பரவல் மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், 28.022025 அன்று பச்சைமலை டாப் செங்காட்டுப்பட்டியில் வனத்துறை மற்றும் திருச்சி KMC மருத்துவமனை சார்பில் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.இந்த முகாம் அன்வர்தீன் திட்ட இயக்குனர்(TBGPCCR) வழிகாட்டுதலின்படியும், பெரியசாமி இவய தலைமை வனப்பாதுகாவலர், திருமதி கிருத்திகா மாவட்ட வன அலுவலர், திருச்சி மற்றும் சரவணகுமார் உதவி வன பாதுகாவலர், தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சிக்கான அறிவிப்புகள் வனத்துறையின் மூலம் ஒரு வாரத்திற்கு முன்பே இரண்டு கண்காணிப்பு சாவடிகளில் துண்டு பிரச்சாரத்தின் மூலமும் மற்றும் கிராமப்புறங்களில் ஒலிபெருக்கியின் மூலமும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.KMC மருத்துவமனையின் மருத்துவர்கள் இம்முகாமில் பங்கேற்று ரத்த அழுத்த சோதனை, உடல் பரிசோதனை, இதயம் மற்றும் பல் பரிசோதனை மேற்கொண்டனர். இந்த முகாம் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்களுக்கும் பச்சைமலை மலைப்பகுதி மக்களுக்கும் பயன்பெறும் வகையில் அமைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் 10 சூழல் மேம்பாட்டு குழு கிராமங்களில் இருந்து வந்து, இந்த முகாமின் மூலம் அவசியமான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை பெற்று பயன்பெற்றனர்

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சரவணன் வனச்சரக அலுவலர் செய்திருந்தார். மேலும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் KMC மருத்துவமனை மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision