பராமரிப்பு பணிகளால் வரும் 27ம் தேதி திருச்சி பாலக்காடு சிறப்பு ரயில் சேவை கரூர் - திருச்சி இடையே ரத்து

பராமரிப்பு பணிகளால் வரும் 27ம் தேதி திருச்சி பாலக்காடு சிறப்பு ரயில் சேவை கரூர் - திருச்சி இடையே ரத்து

சேலம் கோட்ட ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்... திருச்சி - கரூர் ரயில் இருப்புப்பாதையில் கரூர் வீரராக்கியம் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வரும் 27ம் தேதி பாலக்காடு டவுன், திருச்சி ரயில் நிலைய சந்திப்பு சிறப்பு ரயில் ( 06844 ) சேவை கரூர் ரயில் நிலைய சந்திப்பு - திருச்சி ரயில் நிலைய சந்திப்பு இடையே ரத்து செய்யப்பட்டு பாலக்காடு டவுன் - கரூர் ரயில் சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்படும்.

அதே போல் திருச்சி ரயில் நிலைய சந்திப்பு - பாலக்காடு டவுன் சிறப்பு ரயில் ( 06843 ) வரும் 27ம் தேதி திருச்சி ரயில் சந்திப்பில் இருந்து கரூர் சந்திப்பு வரை ரத்து செய்யப்பட்டு கரூர் ரயில் சந்திப்பில் இருந்து பாலக்காடு டவுன் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU