திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் யானைகளுக்கு நடைபயிற்சி தளத்துடன் நீச்சல் குளம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில். வைணவ திருத்தலத்தங்களில் முதன்மையானது என்ற சிறப்பும் உண்டு. இந்த கோயிலில், திருப்பணிகளை செய்து வரும் யானை ஆண்டாள் பக்தர்களால் பெரிதும் விரும்பப்படும் பெருமைக்குரியது.
அதேபோல, பிரேமி (எ) லெட்சுமி யானையும் புதுவரவாக வந்து, ஸ்ரீரங்கம் கோயில் தனது பணிகளை செய்கிறது .இரண்டு யானைகளின் உடல்நிலையை நன்கு பேணும் வகையில், இவற்றிற்கு நடைபயிற்சி தளம் மற்றும் நீச்சல் குளம் கட்ட திருக்கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது.
அதன்படி, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சக்கரை சாலையில், கோயிலுக்கு சொந்தமான உடையவர் தோப்பில், யானைகள் ஆண்டாள் மற்றும் லெட்சுமி இரண்டும் நடை பயிற்சி செய்ய, 857 மீட்டர் நீள பாதையும், பயிற்சி முடிந்த பின்பு குளிப்பதற்கு, 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட குளியல் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று யானைகள் நடைபாதையும், குளியல் தொட்டியும் முறைப்படி பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்வு நடந்தது.அலங்கரிக்கப்பட்ட இரண்டு யானைகளும், மேள, தாளங்கள் முழங்க, ஊர்வலமாக உடையவர் தோப்பிற்கு அழைத்து வரப்பட்டு, நடைபாதை, குளியல் பயிற்சிகள் துவங்கின.இந்நிகழ்வில், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn