22 ஆண்டுகள் பணியாற்றிய திருச்சி அரசு பள்ளி ஆசிரியை கைது
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் ஒருவர், முசிறி சிங்காரச்சோலை தெருவை சேர்ந்த ஆசிரியை அறச்செல்வி (57) என்பவரது மதிப்பெண் சான்றிதழ் போலியானது என கொடுத்த புகார் மனுவின் பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் ஆசிரியையாக பணிபுரிந்த அறச்செல்வியின் 12 ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்பு சான்று அறிவதற்காக அரசு தேர்வுகள்உதவி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வி இணைய இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து பனிரெண்டாம் வகுப்பு மேல்நிலைத்தேர்வு 1991, 1992, 1993 தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பருவதேர்வுகள் எழுதி, அதில் உள்ள ஆறு பாடங்களில் அறச்செல்வி தோல்வி அடைந்துள்ளதாகவும், அதனை மறைப்பதற்காக 6 பாடங்களிலும் போலியான மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்து அதனை பயன்படுத்திஅதன் மூலம் ஆசிரியர் பட்டயப்படிப்பு முடித்து அதன் பின்கடந்த 2001 முதல் முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து (19.10.2023) அன்று விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
போலியான மதிப்பெண் சான்றிதழ் ஆவணம் கொடுத்து அரசு பணியில் ஆசிரியையாக புரிந்ததற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் முசிறி காவல் ஆய்வாளர் கதிரேசன் வழக்குப்பதிந்து அறச்செல்வியை கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision