திருச்சி அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட கூலி தொழிலாளிகள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்சி அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட கூலி தொழிலாளிகள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது.திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா பகுதியை சேர்ந்த அரசுபள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் அக்கா, தங்கை இருவர் பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி உள்ளனர். இருவரையும் ஆசிரியர்கள் அதே பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுமிகள் இருவரையும் அனுமதித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் தாயார் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வாணி மற்றும் போலீசார் முசிறி தாலுகா மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வரும் அஜித் (20), கொத்தனாராக கூலி வேலை பார்த்து வரும் கேசவன் (23) ஆகியோர் சிறுமிகளிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதாக இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
முசிறி அருகே அரசுபள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision