பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிச் செயினை அறுத்துச் சென்ற இரு மர்ம நபர்கள்

பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிச் செயினை அறுத்துச் சென்ற இரு மர்ம நபர்கள்

திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் 100 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி செயினை அறுத்து சென்ற இரண்டு மர்ம நபர்களை நவல் பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ்காலனியை சேர்ந்தவர் கண்ணன் இவரது மனைவி விஜயலட்சுமி (38)இவர் குண்டூர் பகுதியில் உள்ள ஆயில் கடையில் வேலைபார்த்து வருகிறார்.அது போல் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் குண்டூர் 100 அடி சாலையில் வந்த பொழுது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் விஜயலட்சுமியை வழிமறித்து விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 2 1/2 பவுன் தாலி செய்னை பறித்து சென்றனர்

இச் சம்பவம் குறித்து விஜயலட்சுமி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.அதன் அடிப்படையில் நபில் பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision