பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு சார்பாக இருசக்கர வாகன பேரணி

பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு சார்பாக இருசக்கர வாகன பேரணி

திருச்சி பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் ரோடு திட்டத்திற்கு பேராபத்து இருக்கிறது என்பதை ஏற்கனவே சுற்றறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்தது. கடந்த நான்கு வருடங்களாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ வி வேலு அவர்கள் அறிவிக்கப்பட்டு

சர்விஸ் ரோடு திட்டம் முற்றிலுமாக முடக்கப்பட்டது (15.10. 2019) அன்று மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி செயல்படுத்த வேண்டிய திட்டத்தை மாற்றி அகலத்தை 33 மீட்டராக குறைத்து செயல்படுத்த இருப்பதாக தமிழக நெடுஞ்சாலை துறையால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சர்வீஸ் ரோடு திட்டத்தை செயல்படுத்தாமல் முடக்கி வைத்திருந்தால் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். தற்போது திட்டத்தையே சீரழிக்கும் விதமாக தமிழக நெடுஞ்சாலை துறை செயல்படுவதால் குறைந்தபட்சம் திட்டத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். 2019 ஆம் ஆண்டு மதுரை

உயர்நீதிமன்ற உத்தரவின்படி சர்வீஸ் ரோடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்டாரி அவர்கள்  அவர்களுக்கு தற்போது பொதுமக்களிடமிருந்து பதிவு தபாலில் மனு அனுப்பப்பட்டு வருகிறது. தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலையின் அகலத்தை 33 மீட்டர் என்று குறைத்துள்ளதை திரும்ப பெற வேண்டும் 2019 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி சர்வீஸ் ரோடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஒன்றுபட்ட அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஞாயிறு காலை 9

 மணி( 27. 4. 2025) தஞ்சை சாலையில் இருந்து அரியமங்கலம் மேம்பாலம் அருகில் இருந்து திருவரம்பூர் வரை சர்வீஸ் ரோடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தும் போது போராட்டத்திற்கு ஆதரவாக சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பு கலந்து கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.ஆகவே நாம் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது கோரிக்கைக்கு வலுசேர்க்கை வலு சேர்க்க வேண்டும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision