திருச்சியில் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திருச்சியில் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே புறத்தாக்குடியைச் சேர்ந்த மலர்கொடி என்பவர் கடந்த 10 வருடங்களாக இருங்களூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக (தலையாரி) பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு வரை முடித்து இருப்பதால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று கண்ணாகுடி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் லால்குடி அருகே கண்ணாகுடியை சேர்ந்த பெரியசாமி என்பவர் இலவச பட்டா கேட்டு விஏஓ மலர்க்கொடியிடம் மனு அளித்துள்ளார். இதற்கு மலர்கொடி ரூ.2000 கையூட்டு கேட்டுள்ளார். இதை கொடுக்க மறுத்த பெரியசாமி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் பெரியசாமியிடம் ரசாயனம் தடவிய நோட்டை கொடுத்து உள்ளார். ரூ.2000 பணத்தை வாங்கிக் கொண்டு

பெரியசாமி கிராம நிர்வாக அலுவலர் மலர்கொடியிடம் கொடுக்கும் பொழுது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து பல ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் மலர்கொடியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn