திருச்சி மாவட்டத்தில் 09 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு  எண்ணிக்கை 241 சுற்றுகள்  நடைபெறவுள்ளது

திருச்சி மாவட்டத்தில் 09 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு  எண்ணிக்கை 241 சுற்றுகள்  நடைபெறவுள்ளது

திருச்சி மாடவட்டத்தில் உள்ள 09 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 06.04.2021 
அன்று 3,292 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. CAPF மற்றும் காவல்துறை மூலம் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு திருச்சி ஜமால் முகமது கல்லூரியிலும், ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற 
தொகுதிகளுக்கு சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும், மண்ணச்சநல்லூர், இலால்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கு சமயபுரம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும், முசிறி, துறையூர் 
சட்டமன்ற தொகுதிகளுக்கு இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வருகின்ற (02.05.2021) அன்று காலை 08.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளில் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை 
நடைபெறவுள்ளது. மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு 30 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு 32 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு 28 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 27 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை 
நடைபெறவுள்ளது. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு 30 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 
இலால்குடி சட்டமன்ற தொகுதிக்கு 22 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு 25 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. முசிறி சட்டமன்ற தொகுதிக்கு 24 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 

துறையூர்(தனி) சட்டமன்ற தொகுதிக்கு 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை 
நடைபெறவுள்ளது. ஆக மொத்தம் 09 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை 241 சுற்றுகள் 
நடைபெறவுள்ளது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF