என்னதான் நடக்கிறது ஸ்ரீரங்கம் GVN மருத்துவமனையில்? அரசியல் பின்னணியா?
திருச்சியில் கொரோனா நோய் தொற்று 4 ஆயிரத்தை கடந்து சென்றுகொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் அதிகமான பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில் மார்க்கெட் மற்றும் கடைவீதி பகுதிகளுக்கு அடுத்ததாக மிகப் பெரிய விளைவை சந்திக்க காத்திருக்கும் பகுதிகளில் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளும் ஒன்று.
திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் கிழக்கு ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள பிரசவ மருத்துவமனையை பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சில வாரங்களுக்கு முன்பாக GVN கொரானா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளனர். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொண்டே வருகின்றனர் இப்பகுதி மக்கள்.
இந்த மருத்துவமனைக்கு எதன் அடிப்படையில் கொரனா தொற்று நோய் சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டது. பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்கு இடையே எந்த இடைவெளியும் இல்லாமல் கொரோனா மையமாக அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் ஜன்னலை திறந்தால் கூட எதிர் எதிரே குடியிருப்புகள் அமைந்துள்ளது. எந்தவித அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை என்றும், இந்த மருத்துவமனை இவ்வளவு நெருக்கமான காற்றோட்டம் இல்லாமல் வீடுகளுக்கு நடுவே தொடங்கினால் சமூக பரவு தொற்றாக மாறுவதாகவும், இதனால் சொந்த விடுகளை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்படுகிறது என்று கூறி வருகின்றன இப்பகுதி மக்கள்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்லுதலும் அதன் பிறகு அடுத்த நாள் உயிரிழந்தவரின் பட்டியலில் இடம் பெறாமல் இருந்தது என வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுபோல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் சிக்கியும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என புலம்பி வருகின்றனர் இப்பகுதி மக்கள். இந்நிலையில் இன்று ரெங்கா நகர் பகுதியில் அமைந்துள்ள பங்கஜம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வீடுகளுக்கு மிக அருகாமையிலேயே கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவதால் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். மருத்துவமனை கொரோனா மையமாக ஆரம்பிக்கும் போது அனுமதி வழங்கப்படாத நிலையில் திடீரென இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் மனு கொடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு அரசியல் பின்னணியா எனவும் கேட்கின்றனர் இப்பகுதி மக்கள்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கொரோனா அதிகமாக பரவி வரும் ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா? என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP