உபி மற்றும் பீகாரில் மூன்றாவது மொழி என்ன அண்ணாமலை ஒரு தமிழ்நாட்டு துரோகி எம் பி ஜோதிமணி குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பன்னாங்கொம்பில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கரூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி ஜோதிமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில்.
தமிழ்நாடு மாடலை பாஜகவின் கூட்டணியில் உள்ள சந்திரபாபுநாடு கூட பாராட்டுகிறார். ஊலககெங்கும் தமிழர்கள் முதல் இரண்டு இடங்களில் நிறுவனங்களில் பொறுப்புகளில் வகிக்கின்றனர். ஏன் மும்மொழிக் கொள்கை பேசும் ஒன்றிய பாஜக அரசு உ.பி. பீகார் ஆகிய மாநிலங்களில் ஹிந்தி, ஆங்கிலம் உள்ள நிலையில் 3 வது மொழி என்ன தமிழா, ஏன் ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் கூட தமிழ் ஆசிரியர்கள் இல்லாத நிலை தான் உள்ளது. தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் கடுமையான துரோகத்தை பாஜக அரசு செய்கிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர் மாநிலத்திற்கு துரோகம் செய்யும் போது மக்களோடு நிற்காமல் அந்த அரசோடு நிற்கிறார். ஏன் அவர் ஒரு தமிழ்நாடு துரோகி என்று கூறினார். இதே போல் பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கிட உடனே அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision