உலக  உணவு பாதுகாப்பு தினம் - விழிப்புணர்வு கூட்டம், போட்டிகள்

உலக  உணவு பாதுகாப்பு தினம் - விழிப்புணர்வு கூட்டம், போட்டிகள்

உணவு பாதுகாப்புத்துறை, திருச்சி மாவட்டத்தின் சார்பாக உலக  உணவு பாதுகாப்பு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் முதல் நிகழ்வாக மாணப்பாறை குறிஞ்சி பொறியியல் கல்லூரியில் ‘உலக உணவு பாதுகாப்பு தினம்” தொடர்பாக ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற கல்லூரி 
மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இரண்டாவது நிகழ்வாக Rainbow 102.1 FM-ல் மாவட்ட நியமன அலுவலர் சு.ரமேஷ்பாபு ‘உலக உணவு பாதுகாப்பு தினம்” குறித்து நேயர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். மூன்றாவது நிகழ்வாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ‘உலக உணவு பாதுகாப்பு தினம்” குறித்த விழிப்புணர்வு, உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு (DART Programme) சட்ட மன்ற அறிவிப்பின் படி ‘சற்றே குறைப்போம்” விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டம் சுய உதவிக் குழு துவாக்குடி நகராட்சி, சமுதாய அமைப்பாளர் சிவரஞ்சனி மற்றும் திருவெறும்பூர் வட்டாரம், வட்டார ஒருங்கிணைப்பாளர் திலகவதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ‘பாரம்பரிய உணவு தயார் செய்தல்” தொடர்பான போட்டிகள் நடத்தப்பெற்று. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் 
வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையேற்று உரையாற்றினார். மேலும் துவாக்குடியில் செயலபட்டு வரும் FEEL Trust பொது சேவை மையம் சார்பாக குணசேகரன் அவர்கள் உணவு கலப்படம் குறித்த (DART Book) கையேடுகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கினார்.

நான்காவது நிகழ்வாக பெரியார் மருந்தியல் கல்லூரி (Pharmacy Colleges) விரிவுரையாளர் மற்றும் மாணவ மாணவிகளுடன் நிகழ்நிலை (On-line)-ல் ‘உலக உணவு பாதுகாப்பு தினம்” குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. ஐந்தாவது நிகழ்வாக திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் உயர் சிவராசு அரசு துறை சார்ந்த சிறைச்சாலை, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக் கழகம் போன்ற துறைகள் மற்றும் அங்கன் வாடி மையங்களுக்கு 8 சுகாதார உணவு உண்ணும் சான்றிதழ் (Eat Right Campus) சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் 9 கோயில்களுக்கு கடவுளுக்கு உன்னதமான பிரசாதம் வழங்கும் சான்றிதழ் (Blissful Hygienic Offering to God) வழங்கப்பட்டது. சுகாதார மதிப்பீடு சான்றிதழ் (Hygienic Rating) 15 தனியார் உணவு விடுதிகளுக்கும் மற்றும் தென்னூர், அண்ணாநகர், உழவர் சந்தையில் காய்கறி வியாபரிகளுக்கு 74 FOSTAC (Food Safety Training and Certification) சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS


#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO