கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம்!

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம்!

75% குறைவாக ஊனம் உள்ளவர்களுக்கு 3000 மாத உதவி தொகையும், 75% த்திற்கு மேல் ஊனம் உள்ளவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாத உதவி தொகை வழங்க வேண்டும். 

Advertisement

தனியார் துறைகளில் மாற்று திறனாளிகளுக்கான இடஒதுக்கிடு 5% வழங்க ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்- 2016 ன் படி அதை உறுதிபடுத்தி தமிழக அரசு சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். அரசுத்துறையில் பின்னடைவு காலிபணியிடங்களை 3 மாத காலத்திற்குள் நிரப்பிட கடந்த 3.10.2013 அன்று உச்சநீதிமன்றம் தீர்பளித்தது அது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும்

பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 300க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியல் செய்ய முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS