குற்றவாளியை பிடிக்க முயன்ற போலீசை தலையில் வெட்டிய நபர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்!!

குற்றவாளியை பிடிக்க முயன்ற போலீசை தலையில் வெட்டிய நபர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்!!

Advertisement

திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் விஜய் ( 23 ). பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி ஆவார். இந்நிலையில் பாலக்கரை காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் வேல்முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சங்கிலியாண்டபுரதிலிருந்து எடமலைப்பட்டி புதூரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக பைபாஸ் ரோட்டில் நாகாவே பிரிட்ஜ் எதிர்ப்புறம் பைபாஸ் ரோட்டில் கடந்த 21ம் தேதி இரவில் சென்ற போது அங்கு நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் 3 பேர் வர மற்ற இரு நபர்கள் வண்டியின் பின்புறம் அமர்ந்து இருந்தார்கள்.

Advertisement

இந்நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது தொடர் குற்றச் சம்பவங்கள் கொண்ட விஜய் எனும் நபர் என்று அறிந்த முதல் நிலை காவலர் வேல்முருகன் அவருடைய வாகனத்திற்கு முன்னால் தனது வாகனத்தை நிறுத்தி, விஜயின் சட்டையை பிடித்து கீழே இறக்க முயற்சி செய்தபோது. பின்னே அமர்ந்திருந்த விஜயின் நண்பர்களான யுவராஜ், பாண்டியன் இருவரில் யுவராஜ் திடீரென கத்தியால் காவலர் வேலுமுருகனின் தலையின் வெட்டி கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து வேல்முருகன் அருகிருந்த ஆட்டோவில் ஏறி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையெடுத்து காவலரை வெட்டி தப்பி ஓடிய மூன்று பேரையும் பிடிக்க கோட்டை காவல் உதவி ஆணையர் ரவி அபிராம் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த பாண்டியன், விஜய் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் போலீசாரை தாக்கிய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் யுவராஜ் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2ல் வழக்கறிஞர் ரவிக்குமார் உதவியுடன் சரணடைந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் படி யுவராஜை லால்குடி கிளை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement