கேரளாவைப் போல திருச்சியிலும் பரிதாபம்! வாயில் வெடிபொருள் வெடித்து நரி உயிரிழப்பு!!

கேரளாவைப் போல திருச்சியிலும் பரிதாபம்! வாயில்  வெடிபொருள் வெடித்து நரி உயிரிழப்பு!!

திருச்சி அருகில் வயல்வெளி பகுதியில் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்த இறைச்சியைக் அடித்தபோது, அது வெடித்து சிதறியதில் நரியின் வாய் கிழிந்து உயிரிழந்தது.இந்த கொடூரமான முறையில் வேட்டையில் ஈடுபட்டதாக 12 நரிக்குறவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், பேரூர் வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக, ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது.இதன் பேரில் காவல்துறையினர் அங்கு சென்று, நரி வேட்டையில் ஈடுபட்ட 12 பேரை சுற்றி வளைத்தனர்.

விசாரணையில் அவர்கள் திருச்சி திருவரம்பூர் அருகேயுள்ள பூலாங்குடியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் என்பதும், நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து வேட்டையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.தொடர்ந்து நரி வேட்டையாடிய ராம்ராஜ்(21), சரவணன்(25), ஏசுதாஸ்(34), சாந்தகுமார்(28), தேவதாஸ்(41), பாண்டியன்(31), ஜெயகுமார்(35), சத்தியமூர்த்தி(16), சரத்குமார்(26), ராஜூ(45), பட்டம்பிள்ளை(78), ராஜமாணிக்கம்(70) என 12 பேரையும் மாவட்ட வனத்துறை அலுவலர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

கேரளாவில் உணவுப்பொருளை சாப்பிட போது அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து சின்ன யானை உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருச்சியில் அதேபோன்ற முறையில் ஏற்பட்டுள்ள நரியின் உயிரிழப்பு வன ஆர்வலர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.