“நான் பிறந்த ஊர் திருச்சி தான்”!! நிலவின் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த சண்முக சுப்பிரமணியன் சிறப்பு பேட்டி!

“நான் பிறந்த ஊர் திருச்சி தான்”!! நிலவின் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த சண்முக சுப்பிரமணியன் சிறப்பு பேட்டி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செப்டம்பர் மாதம் நிலவுக்கு சந்திரயான்– 2 விண்கலத்தை அனுப்பியது. அதனுடன் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய விக்ரம் லேண்டரை அனுப்பியது. விக்ரம் லேண்டர் நிலவில் சாஃப்ட் லேண்டிங் அடிப்படையில் தரையிறங்கும் வைகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அது நிலவில் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு இஸ்ரோவுடனான தொடர்பில் இருந்து காணாமல் போனது. மீண்டும் விக்ரம் லேண்டருடன் தொடர்புகொள்ள முடியாமல் போனதால், லேண்டர் நிலவில் தரையிறங்கியதா அல்லது வேறு எங்கேனும் விழுந்துவிட்டதா என்று விஞ்ஞானிகளுக்கு சந்தேகம் எழுந்தது அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் இருந்தது.

சண்முகம் சுப்பிரமணியன்

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது ? எங்கே இருக்கிறது? என தேடிய வேளையில் இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியாததை தமிழக இளைஞர் பொறியாளர் சண்முகம் சுப்பிரமணியன் தனிமனிதராக கண்டுபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.

Advertisement

சண்முக சுப்பிரமணியன் கூறுகையில்… “நான் பிறந்த ஊர் திருச்சி தான். திருச்சி தில்லைநகர் மருத்துவமனை ஒன்றில் தான் பிறந்தேன். என்னுடைய ஆட்சி,மாமா, உறவினர்கள் திருச்சியில் தான் உள்ளார்கள். என் அம்மாவுடைய ஊர் திருச்சி. திருச்சியில் பொன்னகர் இப்போது எடமலைப்பட்டி புதூரில் வசித்து வருகிறார்கள். நான் மதுரை செயின்ட் ஜோசப் பள்ளியில் பள்ளி படிப்பையும் திருநெல்வேலி அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் படிப்பையும் படித்தேன். என்னுடைய இன்னொரு சொந்த ஊர் திருச்சி தான். என்றார்.

மேலும் அவர் “சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஆப் கிரியேஷன்ஸ், வெப்சைட், மற்றும் விண்வெளி போன்ற ஆராய்ச்சிகளை செய்து வருகிறேன். நல்ல வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் செய்வேன்” என்கிறார்.