"ஒரு கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால் முககவசம், மரக்கன்றுகள் இலவசம்" - அசத்தும் அக்னி சிறகுகள் அமைப்பினர்!!
"அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது பூமி மட்டும்தான்" என்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் வென்டெல் பெர்ரி ( Wendell Berry). உண்மைதான். பொதுவானதின் மீதுதான் பொதுவாக யாருக்கும் அக்கறை வருவதில்லை. சுற்றுச்சூழல் கூட அப்படித்தான். மனிதரிடமிருந்து இயற்கையைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட தினம் இது. உலகம் முழுவதும் சுமார் 183 நாட்களில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
Advertisement
அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 8 வருடங்களாக சமூக சேவை செய்துவரும் அமைப்பினர் இவர்கள்! மாநகரில் விழா காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை காவல் துறையோடு கைகொடுத்து உதவும் அமைப்பினர் இவர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது திருச்சியை திரும்பி பார்க்க வைத்த அமைப்பினர் இவர்கள். இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்திலும் ஏழை எளியோருக்கும், சாலையோரம் வசிப்பவர்களுக்கு தினந்தோறும் உணவளித்து வரும் அமைப்பினர் இவர்கள். இளைஞர்களால் உருவாக்கப்பட்டு மாற்றத்தை நோக்கி முன்னேற்றி செல்லும் அக்னி சிறகுகள் அமைப்புதான்!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எங்களிடம் ஒரு கிலோ பிளாஸ்டிக்கை கொடுத்தால் மரக்கன்றுகள் மற்றும் முகக் கவசங்கள் இலவசமாகப் பெற்று செல்லுங்கள் என இவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பாக உலக சுற்றுபுறச்சூழல் தினத்தை முன்னிட்டு இணைய வழி "பசுமை புரட்சி" என்கின்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இயற்கை விவசாயம்,உரம் தயாரிப்பு,மாடி தோட்டம், மூலிகை வளர்ப்பு பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்போம்,குப்பைகளை உரங்களாக மாற்றுவோம்,இயற்கை மாடி தோட்டம் அமைக்க ஊக்குவிப்போம் போன்ற பல்வேறு தீர்மானங்கள் இந்த கருத்தரங்கில் எடுக்கப்பட்டன.
நெகிழி இல்லா இந்தியாவை உருவாக்க களமிறங்கியுள்ள அக்னி சிறகுகள் அமைப்பினர் உண்மையிலேயே கிரேட் தான்!
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய